search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்ம மனிதர்கள் கைவரிசை"

    வீட்டின் கதவை உடைத்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான நகை - பணம் மற்றும் பொருட்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    மதுரை:

    மதுரை எல்.ஐ.சி. நகர் எல்.ஐ.சி. காலனியைச் சேர்ந்தவர் சீதாராமன் (வயது 41). இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். நேற்று அவர்கள் வீடு திரும்பினர். அப்போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கே இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

    இதுகுறித்து அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டிற்குள் இருந்த 11 பவுன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள், எல்.இ.டி. டி.வி. மற்றும் ரூ.15 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக சீதாராமன் தெரிவித்தார். கொள்ளைப்போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

    அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.

    விருத்தாசலத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து ரூ. 1 1/2 லட்சம் மதிப்புள்ள மதுப்பாட்டில்களை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் குப்பநத்தம் புறவழிச்சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் விற்பனையாளராக ரமேஷ் என்பவரும், மேற்பார்வையாளராக ஆறுமுகம் என்பவரும் பணியாற்றி வருகிறார்கள்.

    நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் 2 பேரும் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். அவர்களால் உடைக்க முடியவில்லை. உடனே கடையின் முன்பக்க இரும்பு ‌ஷட்டரில் மாட்டப்பட்டிருந்த பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் அங்கு அட்டை பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். மொத்தம் ரூ.1½ லட் சம் மதிப்புள்ள மதுப்பாட்டிகளை எடுத்து சென்று விட்டனர்.

    இன்று மதியம் வழக்கம்போல் விற்பனையாளர் ரமேஷ், மேற்பார்வையாளர் ஆறுமுகம் ஆகியோர் கடைக்கு வந்தனர்.

    அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த மது பாட்டில்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து அவர்கள் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    நள்ளிரவில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மது பாட்டில்கள் கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 52). இவரது மனைவி திலகவதி. திண்டிவனத்தை அடுத்த பாதிரியாபுலியூரில் உள்ள அரசு பள்ளியில் கணபதி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு திலகவதிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடனே வீட்டை பூட்டி விட்டு திலகவதியை திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கணபதி அழைத்துசென்றார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 18 பவுன் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    திலகவதியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு அவருக்கு தேவையான பொருட்களை எடுப்பதற்காக கணபதி மட்டும் நள்ளிரவில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிகிடந்தனர்.

    மேலும் அதில் இருந்த 18 பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து திண்டிவனம் போலீசில் கணபதி புகார் செய்தார். புகாரின் பேரில் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    செஞ்சி அருகே பகவான் மல்லிநாதர் ஜெயின் கோவிலில் ரூ.1½ கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெரும்புகை கிராமம். இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த பகவான் மல்லிநாதர் ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக சந்திரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஒரு அறையில் பல கோடி மதிப்புள்ள 35 ஐம்பொன் சாமி சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவு பூஜை முடிந்ததும் பூசாரி சந்திரன் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் சிலர் இந்த கோவிலுக்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு சாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சென்றனர். அந்த அறையில் போடப்பட்டுள்ள பூட்டுகளை கடப்பாரையால் உடைத்தனர்.

    பூட்டை உடைத்ததும் அவர்கள் உள்ளே சென்றனர். அங்கிருந்த 6 ஐம்பொன் சிலைகளை எடுத்து சாக்கு மூட்டைகளில் கட்டினர். பின்பு அவற்றை தூக்கி கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இன்று காலை 530 மணிக்கு பூசாரி சந்திரன் கோவில் நடை திறப்பதற்காக வந்தார். அப்போது அங்கு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து அந்த கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையறிந்ததும் கிராம மக்கள் திரண்டு கோவிலுக்கு வந்தனர். அங்கு சாமி சிலைகள் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு சென்றனர். அந்த அறையில் இருந்த மல்லிநாதர்-கீர்த்தகரர், தர்மேந்தர், பத்மாவதி, ஜோலாம்பாள், பாசுவநாதர் உள்பட 6 ஐம்பொன் சிலைகள் கொள்ளை போய் இருந்தன.

    கொள்ளை போன சாமி சிலைகளின் மதிப்பு ரூ.1½ கோடியாகும். மேலும் இந்த கோவிலில் இருந்த 29 சிலைகள் பத்திரமாக உள்ளன. இதனால் பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் தப்பின.

    இந்த கொள்ளை குறித்து செஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பி ரண்டு ரவிச்சந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

    கோவிலில் சாமி சிலைகள் திருட்டுப்போன அறையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கோவிலில் மோப்பம் பிடித்து விட்டு சிறிதுதூரம் ஓடி நின்று விட்டது.


    மேலும் விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் கைரேகைகளை பதிவு செய்தனர். கோவிலின் பூட்டை உடைத்து ஐம்பொன் சாமி சிலைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    பகவான் மல்லிநாதர் ஜெயின் கோவிலில் ரூ.1½ கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் கொள்ளை போன சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருவட்டாரில் ஆசிரியர் வீட்டில் 19 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவட்டார்:

    திருவட்டார் வெட்டுப் புலியைச் சேர்ந்தவர் மரியதாசன் (வயது 73). இவரது மனைவி சுந்தரபாய். இவர்கள் 2 பேரும் ஆசிரியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். 

    மரியதாசன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 13-ந் தேதி தோட்டவரம் பகுதியில் உள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரிக்கு சென்றார். டாக்டர்கள் அவரை உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தினர். எனவே மரியதாசன் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்தார். அவருடன் உறவினர்களும் இருந்தனர். இதனால் வெட்டுப்புலியில் உள்ள அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இன்று காலை சிகிச்சை முடிந்து மரியதாசன் அவரது வீட்டுக்கு திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த மரியதாசன் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் வீடு முழுவதும் சிதறிக்கிடந்தன. 

    பீரோவில் இருந்த 19 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது. இதுபற்றி மரியதாசன் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மரியதாசன் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது.  மரியதாசன் வீட்டில் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் தான் கைவரிசை காட்டியிருக்க வேண்டும் என்று போலீசார் கருதினர். அவர்களை கண்டுபிடிக்க அக்கம் பக்கத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் இருக்கிறதா? என்றும் போலீசார் விசாரித்தனர். இதில் ஒரு வீட்டில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதில் பதிவான காட்சிகளில் மரியதாசன் வீட்டுக்குள் மர்மநபர்கள் புகுந்தது பதிவாகி இருக்கிறதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். மரியதாசனின் மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். 
    விருத்தாசலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பெரிய வடவாடி உள்ளது. இங்கு நடுகாட்டு அம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாமிதரிசனம் செய்வதுவழக்கம். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த கோவிலில் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் காணிக்கை பணத்தை உண்டியலில் செலுத்தினர்.

    இந்த கோவிலில் பூசாரிகளாக முத்து, குமார் ஆகியோர் இருந்து வந்தனர். நேற்று இரவு பூஜை முடிந்ததும் இருவரும் கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றனர். நள்ளிரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் கோவிலின் சுற்றுசுவரை ஏறி குதித்து உள்ளே புகுந்தனர். 
    அவர்கள் கோவிலின் முன்பு இருந்த 5 அடி உயரம் உள்ள இரும்பு உண்டியலை வெல்டிங் மிஷன்மூலம் துளைபோட்டனர். பின்னர் அதில் இருந்த பணத்தை ஒரு பையில் மூட்டையாக கட்டிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

    இன்று காலை பூசாரி குமார் வழக்கம்போல் கோவிலுக்கு வந்தார். கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது அங்கு உண்டியல் உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

    இதுகுறித்து அவர் மங்கலம்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். உண்டியலில் இருந்த ரூ.2 லட்சம் காணிக்கை பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் இந்த கொள்ளையில் துப்பு துலக்க கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கோவிலின் முன்பு மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது.

    விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுனர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் தடயங்களை பதிவு செய்தனர். உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஏற்கனவே இந்த கோவிலில் 3 முறை உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.
    விருத்தாசலம் அருகே ஒரே நாள் இரவில் 2 கோவில்களில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த சு.கீணனூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறும்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் காணிக்கை பணம் செலுத்தி வந்தனர். நேற்று இரவு பூஜை முடிந்ததும் பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    நள்ளிரவில் மர்ம மனிதர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங் கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை ஒரு பையில் மூட்டையாக கட்டி கொண்டனர்.

    அதன் பின்னர் அவர்கள் அம்மன் கழுத்தில் கிடந்த 1½ பவுன் தாலி செயினையும் திருடி சென்றனர். இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து கம்மாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு விரைந்து சென்று நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கார்மாங்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு மர்ம மனிதர்கள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்தனர். அதில் இருந்த ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இந்த கோவில் அருகே பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலும் மர்ம மனிதர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

    இந்த 2 சம்பவங்கள் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம மனிதர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

    ஒரே நாள் இரவில் 2 கோவில்களில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×